மடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை(14) காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது.
சிலாப மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி விமல் சிறி ஜயசூரிய ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்து உள்ளனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் அதனை தொடர்ந்து ஆசியும் இறை மக்களுக்கு வழங்கப்பட்டது.
குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார்,, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பி.கிறிஸ்து நாயகம் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அகில இலங்கை கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஸ்தாபகர் அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ்.சந்ரு பெர்னாண்டோ, அரசியல் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து சுமார் 7 லட்சம் வரையிலான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவில் நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் கலந்து கொள்ளும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி யாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment