Latest Articles

Home Design

மிக முக்கியமான வானிலை முன்னறிவிப்பு

மிக முக்கியமான வானிலை முன்னறிவிப்பு

17 ஆகஸ்ட் 2024க்கான வானிலை முன்னறிவிப்பு இந்த அறிவிப்பானது இன்றை தினம் ஆகஸ்ட் 17-2024 அன்று காலை 09.00 மணிக்கு வெளியிடப்பட்டது


அதனடிப்படையில்  இன்று இலங்கையை அண்மித்துள்ள குறைந்த வளிமண்டல குழப்பம் காரணமாக தீவின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழை நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா காலி மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.  என்று கூறப்பட்டுள்ளது 

அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia