Latest Articles

Home Design

மன்னார் வைத்தியசாலையில் சிந்துஜாவின் மரணம் குறித்து வைத்தியர்களின் கையொப்பத்துடன் கடிதம்

மன்னார் வைத்தியசாலையில் சிந்துஜாவின் மரணம் குறித்து வைத்தியர்களின் கையொப்பத்துடன் கடிதம்

ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்து நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடந்து கொண்டோம் போன்ற விடயங்களை உள்ளடக்கி கைதயழுத்துடனான கடிதம் ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்கள் 


அந்த கடிதத்தில் தெரிவிக்கப்ட்டிருப்பதாவது 

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்த சிந்துஜா என்பவரின் மரணம் குறித்து  ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்ததோடு நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடந்து கொண்டோம்.

அதனால் பொதுவான கருத்துக்களை நாம் வெளியிட்டிருக்க வில்லை என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு ஊடாக ஊடகங்களுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை(15) மாலை ஊடக அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

28.07.2024 அன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணித்த திருமதி ஆ.சிந்துஜா என்ற இளம் தாயின் மரணம் வைத்தியர்களாகிய எங்களையும் வேதனைப்படுத்தியது மட்டுமன்றி உங்களைப் போன்று அதே அளவு மன அமைதியின்மையையும் ஏற்படுத்தியது உண்மை. 

ஆயினும்இ ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்ததோடு நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடந்து கொண்டோம்.அதனால் பொதுவான கருத்துக்களை நாம் வெளியிட்டிருக்கவில்லை .

ஆனால் நிறுவனத்தின் தலைவர் என்ற அடிப்படையில் வைத்தியசாலையின் பணிப்பாளர் இவ் விடயத்திற்கு நாங்கள் பொறுப்பு கூற கடமைப்பட்டிருக்கிறோம். ஆகவே பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெற்று உண்மைகள் கண்டறியப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தார்.

சம்பவம் நடந்த தினத்திலிருந்து நிறுவன ஊழியர் களாகிய  நாம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தோம் .

 (1).28-07-2024  - தாயின் மரணம்இ(2)29-07-2024 – (i) பாதிக்கப்பட்ட குடும்பத்தை உள்ளடக்கிய வைத்தியசாலை

   பணிப்பாளர் தலைமையிலான மீளாய்வு நடைபெற்றது.(ii) தாயின் மரணம் வைத்தியசாலையின் பணிப்பாளரால் சுகாதார

 அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டது.(3).30-07-2024 வைத்தியசாலை பணிப்பாளரால் ஆரம்பகட்ட புலன் விசாரணை குழு நியமிக்கப்பட்டது.(4).31-07-2024 -பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரால் மரண விசாரணை கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

(5).01-08-2024 வைத்தியசாலை பணிப்பாளரால் மாகாண சுகாதார பணிமனையின் சுயாதீனமான விசாரணைக்காக விண்ணப்பிக்கப்பட்டது .

 (6).02-08-2024 பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளரின் ஆரம்ப புலன் விசாரணை குழு நியமிக்கப்பட்டது.

(7)03-08-2024 மாகாண சுகாதார பணிமனையின் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.

(8)08-08-2024 சுகாதார அமைச்சின் விசாரணை மீளாய்வு நடைபெற்றது .

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கையில் அது தொடர்பான விளக்கங்கள் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் பொது அமைப்புகளுக்கும் கலந்துரையாடல்கள் மூலம் அறிய தரப்பட்டு கொண்டிருந்தன. இவற்றிலிருந்து அன்பானதும்இ பொறுப்பு மிக்கதுமான மன்னார் மாவட்ட மக்களுக்கு நாம் தெரியப்படுத்துவது

நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைந்து நாம் கருத்து வெளியிடாமல் இருந்ததென்பது எதையும் மூடி மறைக்கும் நோக்கில்  இழுத்தடிக்கும் நோக்கிலோ அல்லது பிழைகளுக்கு துணை போகும் நோக்கிலோ அல்ல.

மேலும் இது தொடர்பான தற்போதைய நிலையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 

தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார அமைச்சின் மூலம் தீர்மானிக்கப்படும்  என்பதால் இறந்த இளம் தாய்க்கு நீதி வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்பதை கடிதம் மூலம் சுகாதார அமைச்சிற்கு அறிக்கை இட்டுள்ளோம்.

(பிரதி இணைக்கப்பட்டுள்ளது)

தற்சமயம் பல்வேறு காரணங்களால் மக்களுக்கும் வைத்திய சேவைக்கு இடைப்பட்ட இடைவெளி வெகுவாக அதிகரித்துள்ளது.இது ஆரோக்கியமான ஒரு சூழ்நிலை அல்லஇ ஆகவே வைத்தியசாலையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை யோ முன்னேற்றங்கள் தொடர்பான கருத்துக்களையோ எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறியத்தருவது மக்களான உங்களின் தார்மீகக் கடமையாகும் என்பதையும் இவ்வறிக்கை மூலம் சுட்டிக்காட்ட விரும்பு கின்றோம்.

இது உங்கள் வைத்தியசாலை நாங்கள் உங்கள் சேவையாளர்கள். இங்கு இடம்பெற்ற பிழை ஒன்றை வைத்து அனைவரையும் பொதுமைப்படுத்தி குற்றம் சாட்டுவது என்பது ஒட்டுமொத்த வைத்திய சாலையையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி கவலையடையச் செய்கிறது.

எனினும் நாம் உங்களுடன் சேர்ந்து பயணிப்போம். இந்த விடயத்தில் மட்டுமன்றி எதிர்வரும் சந்தர்ப்பங்களிலும் உங்களுடன் இணைந்து வைத்தியசாலையை முன்னேற்றுவதை எமது மனப்பூர்வமான கடமையாக கருதுகின்றோம்.

இந்த அறிக்கையானது பொதுமக்களுக்கு தெளிவினை ஏற்படுத்திஇ மக்களுக்கும் வைத்தியசாலை க்கும் இடையிலான நம்பிக்கையை மீளக் கட்டி எழுப்பும் செயற்பாடுகளில் ஒன்றாகவே வெளியிடப்படுகிறது.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia