தலைமன்னார் கடற்கரையில் 208 கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒதுங்கிய பொதி ஒன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்
இந்த சம்பவம் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் தலைமன்னார் ஊர் மலை மற்றும் பழைய பியர் கடற்கரைக்கு அருகாமையில் நடத்தப்பட்ட தனித்தனியான தேடுதல் நடவடிக்கைகளின் போது கடற்படையினர் சுமார் 208 கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளைக் கைப்பற்றினர்.
வடமத்திய கடற்படை கட்டளையில் SLNS தம்மன்னா மூலம் கடந்த ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஊருமலை மற்றும் பழைய பையர் கடற்கரை பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சந்தேகத்திற்கிடமான 03 சாக்குகள் மற்றும் 02 பொதிகள் கரையொதுங்கியதையடுத்து கடற்படையினர் தேடியதில் அவற்றில் சுமார் 208 கிலோகிராம் (ஈரமான எடை) எடையுள்ள பீடி இலைகள் அடைக்கப்பட்டிருந்ததை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட டெண்டு இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கடற்படையினரின் செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது
No comments
Post a Comment