இலங்கை தமிழரசு கட்சியினுடைய (ITAK) மத்திய குழு உறுப்பினராகிய அரியநேந்திரன் (Arianendran) கட்சியுடன் உரையாடாமல் தன்னை தமிழ் பொது வேட்பாளராக அறிவித்தமை சம்பந்தமாக அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
அவருடைய விளக்கத்தை கட்சிக்கு சொல்வதற்கு ஒரு வார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் (Vavuniya) தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்றையதினம்(11) இடம்பெற்றது.
அதில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாகவும், பேசப்பட்டுள்ளது. இதற்கு முன்னரே இரண்டு கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அந்த கூட்டத்தில் அரியநேந்திரனும் கலந்து கொண்டிருந்துள்ளார்.அந்த கூட்டங்களிலேயே இப்போது தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மக்களோடும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களோடும் தொடர்ந்து கலந்துரையாடுவது அவசியம் என்று கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், தமிழரசுக் கட்சி இதற்கு ஆதரவா எதிர்ப்பா என்று ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை.
தமிழரசுக்கட்சியின் தீர்மானம்
அவ்வாறிருக்க, இலங்கை தமிழரசு கட்சியினுடைய மத்திய குழு உறுப்பினராகிய அரியநேந்திரன் கட்சியுடன் உரையாடாமல் தன்னை தமிழ் பொது வேட்பாளராக அறிவித்தமை சம்பந்தமாக அவரிடம் விளக்கம் கூறுவது என நேற்றையக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவருடைய விளக்கத்தை கட்சிக்கு சொல்வதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரைக்கும் கட்சி நிகழ்வுகள் எதிலும் அவருக்கு அழைப்பு அனுப்புவதில்லை என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
அவருடைய விளக்கத்தை கட்சிக்கு சொல்வதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதுவரைக்கும் கட்சி நிகழ்வுகள் எதிலும் அவருக்கு அழைப்பு அனுப்புவதில்லை என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
JOURNALIST
Parameswaran Kartheeban
No comments
Post a Comment