Latest Articles

Home Design

அனுரவிற்கு அமெரிக்கா அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வாழ்த்து

அனுரவிற்கு அமெரிக்கா அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வாழ்த்து

ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றிக்காக அமெரிக்கா அனுரகுமாரதிசநாயக்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

தங்கள் ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்தியமைக்காக இலங்கை மக்களை பாராட்டுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரப்பட்ட முன்னுரிமைகளின் அடிப்படையில் இணைந்து செயற்பட தயார் என அவர் தெரிவித்துள்ளார்

இதே நேரம் ஊடகங்களுக்கு புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க கருத்துத் தெரிவிக்கையில் 

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றமை முதல் வெற்றியாகும் என புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைவரும் ஒன்றினைய வேண்டும் 

சவால்களைத் தனி நபராலும் அணியாலும் வெற்றி கொள்ள முடியாது. நாட்டுக்காகக் கட்டம் கட்டமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் அதற்கான  பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

ஆதரவாளர்களுக்கு நன்றி 

எனக்கு ஆதரவளித்த மற்றும் ஆதரவளிக்காத அனைத்து பிரஜைகளையும் இலங்கையர் என்ற அடிப்படையில் பேதமற்ற வகையில் ஒன்றிணைத்து செயற்படுவேன் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச வாழ்த்து

இதே நேரம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்கு SJB தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia