இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் உங்களின் வெற்றிக்கு எனது பாராட்டுக்கள் இந்தியாவின் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை விசன் சாகர் கொள்கையில் இந்தியா இலங்கைக்கு முதலிடத்தை அளித்துள்ளது என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
எங்கள் மக்களினதும் பிராந்தியத்தினதும் நன்மைக்காக எங்களின் பல்தரப்பட்ட ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காபந்து அரசாங்கம்
மேலும் அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காபந்து அரசாங்கமொன்றை அமைப்பதே முன்னுரிமைக்குரிய நடவடிக்கை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் காபாந்து அரசாங்கத்தை அமைப்பதே முக்கிய முன்னுரிமைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள கட்சி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் வரை நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடு;ப்பதற்கான காபந்து அரசாங்கம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அமைச்சரவை
நான்கு உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிச தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் அனுரகுமாரதிசநாயக்கவும் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றிருப்பார்கள் மக்கள் வழங்கிய ஆணையை இந்த அமைச்சரவை பிரதிபலிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்
No comments
Post a Comment