கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் 31 இலட்சத்து 43 ஆயிரத்து 871 சதுரமீற்றர் பரப்பளவு நிலப் பகுதியிலிருந்து 77இ908 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு
இன்று (26) அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்ட விபரத்தை தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான கண்ணவெடி அகற்றல்
இலங்கையின் வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதி உதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தச்சடம்பன் அம்பகாமம் ஒழுமடு மாங்குளம் கொக்காவில் பகுதியிலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதியிலும் செய்து வருகிறது
கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் கண்டாவளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தட்டுவன்கொட்டி பகுதியிலும் 31 இலட்சத்து 43 ஆயிரத்து 871 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 77,908 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.
தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடி அகற்றும் பணிகளை புதுக்குடியிருப்பு அம்பகாமம் மாங்குளம் கொக்காவில் தட்டுவன்கொட்டி மற்றும் ஆனையிறவிலும் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றது என்று ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment