மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குருவில்வான் கிராமத்தில் பின்தங்கிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினால் அமைக்கப்பட்ட புதிய வீடு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது இன்றைய தினம் சனிக்கிழமை(12) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு குறித்த குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இராணுவத்தின் 10 வது கெமுனு கோவா படைப் பிரிவினால் அமைக்கப்பட்ட குறித்த வீடு தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் ஆர்.பி.ஏ.ஆர்.பி ராஜபக்ஷ தலைமையில் திறப்பு விழா இடம்பெற்றது.
இதன் போது குறித்த வீட்டை இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பி.சி.பீரிஸ் வைபவ ரீதியாக திறந்து வைத்து குறித்த குடும்பத்திடம் கையளித்தார்.
மேலும் குறித்த வீட்டு வளாகத்தில் மர நடுகை இடம்பெற்றது,குறித்த குடும்பத்திற்கு இராணுவத்தினால் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.
No comments
Post a Comment