கனவுகளுடன் மண்ணை முத்தமிட்டு மரணித்து போன மாவீரர்களுக்கு நான் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் செயற்படுவேன் என்று வன்னி நாடாளுமன்றத் தெர்தலில் போட்டியிடும் இளம் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்
தேராவில் துயிலுமில்லம் சென்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தய பின் முன்னாள் போராளிகளை சந்தித்து உரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்
மாவீரர்களின் சிதை மீது நான் அரசியல் செய்ய விரும்பவில்லை அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து எப்பொழுதும் தமிழ் தேசியத்துடன் பயணிப்பேன் என்றும் அவை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் தேராவில் மாவீரர் துயிலு மில்லத்திற்கு வந்திருக்கிறேன் நிச்சயமாக மாவீரர்களுக்கு உறுதியாகவும் விசுவாசமாகவும் நம்பிக்கையாகவும் இருப்பேன் என்றும் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்
இதன் போது முன்னாள் போராளிகளும் வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் அவர்களின் ஆதேரவாளர்களும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment