நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தெர்தலில் வன்னி மாவட்ட வேட்பாளராக களமிறங்கியுள்ள சம்சோன் ஜெரோம் அவர்களுக்கு மன்னார் மாவட்ட மக்களிடையே செல்வாக்குகள் அதிகரித்து வருகிறது
தொடர்ச்சியாக கிராமங்ககு;கு சென்று மக்களை சந்தித்து தனக்கான ஆதரவுகளை பெற்று வருகிறார்
அதனடிப்படையில் நேற்றையதினம் மன்னார் பள்ளிமுனை மற்றும் அரிப்புத்துறை கிராமங்களுக்குச் சென்று தனது தேர்தல் பிரசாசர நடவடிக்கைகளை மேற்கோட்ட போது இரண்டு கிராமத்து மக்களும் ஜெரோம் அவர்களிடன் பல கேள்விகளை முன்வைத்தனர்
மக்களின் கேள்வி மற்றம் பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
அரிப்புத்துறை மக்கள் சந்திப்பில்:-
கேள்வி: தமிழர்களுக்கான பாரம்பரிய தேசியக் கட்சிகள் இன்று சிதைவடைந்து தலைமைத்துவத்தை இழந்து சிதறிப்போய் இன்று மக்களால் நிராகரிக்கப்படும் நிலையில் உள்ளன. இந்த சூழலில் உங்கள் தூர நோக்கத்துடனான செயற்பாடுகள் எவ்வாறானதாக இருக்கும்?
பதில்: தமிழ் தேசியக் கட்சிகள் இன்று சிதைவடைந்துள்ளது ஒரு துர்ரதிஸ்டவசமானது என்பது எனது நிலைப்பாடு. பொதுச் சபை, சிவில் சமூகம் போன்றவற்றால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்காதது தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சிகளும் கட்சித் தலைமைகளும் மக்கள் நலன் கருதி சில விட்டுக்கொடுப்புகளை செய்திருந்தால் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளையும் ஒரே சின்னத்தின்கீழ் கொண்டுவந்திருக்க முடியும் என்பது எனது நிலைப்பாடு.
என்னைப் பொறுத்த வரையில் இந்நிலை முடிந்தளவு விரைவாக மாற்றப்பட வேண்டும். மக்களுக்கான தூய அரசியலை முன்னெடுக்கக் கூடிய புதிய தலைமையின் கீழ் அனைத்து கட்சிகளும் கொண்டுவரப்பட்டு மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் செயலாக்கமுடைய அமைப்பாக மாற்றப்பட வேண்டும். இது அவ்வளவு இலகுவானதல்ல.
யுத்த காலத்தின் போது ஒரு தலைமையின் கீழ் செயற்படும் நிலை இருந்தது. யுத்தத்தின் பின்னர் சில காலம் ஒரு சிறந்த ஆளுமையின்கீழ் அனைத்து கட்சிகளும் செயற்பட வேண்டிய தேவை இருந்தது. ஆனால், இன்று நாம் இவர்களிருவரையும் இழந்து ஆயனில்லா ஆடுகள் போல் வழிநடத்துவதற்கு ஒரு சிறந்த தலைமை இல்லாது நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
என்னைப் பொறுத்தவரை இப்பிரச்னைக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன.
1. ஒரு சிறந்த தலைவரை நாம் உருவாக்க வேண்டும். இதன் சாத்தியப்பாடு பற்றி நீண்ட கேள்விகள் எழுவது ஒன்றும் ஆச்சரியமில்லை
2. எமது சிவில் சமூகக் கட்டமைப்பை வலுவுள்ளதாக மாற்றி அதனை அழுத்தம் கொடுக்கும் ஒரு சக்தியாக மாற்ற வேண்டும். இதய சுத்தியுடன் மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்படக் கூடிய ஒரு குழுவினரால் இதை செயற்படுத்த முடியும். என்னைப் பொறுத்த மட்டில் இன்று உள்ள சூழல் இவ்வாறான கட்டமைப்பை உருவாக்கி செயற்படுத்த சாதகமாக உள்ளது. தமிழ் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சிறிதளவேனும் பயணித்தவன் என்ற முறையில் இத்தேர்தலில் எனது வெற்றி தோல்விகளுக்கப்பால் இதற்கு செயல் வடிவம் கொடுக்க எனது பங்களிப்பு எப்போதும் இருக்கும்.
பள்ளிமுனை மக்கள் சந்திப்பில் :-
கேள்வி: நீங்கள் பாராளுமன்றம் சென்றால் எமது கிராமம் போன்று கடலை நம்பி வாழும் மக்களுக்கு என்ன செய்வீர்கள் .
பதில்: பள்ளிமுனை உட்பட மன்னார் மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் பல கிராமங்கள் கடல் வளத்தை தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளார்கள். இவ்வாழ்வாதாரமே அவர்களது பொருளாதார நிலையை தீர்மானிக்கும் பிரதான காரணியாக உள்ளது. பிள்ளைகளின் பாடசாலை தேவைகள் உட்பட நீங்கள் இங்கு முன்வத்த பல பிரச்சனைகளுக்கு பொருளாதார வசதியின்மையும் வறுமையுமே மூல காரணங்களாக அமைந்துள்ளன.
ஆகவ நீடித்ததும் நிலைபேறானதுமான பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கான தகுந்த திட்டங்களை வகுப்பதும் அத்திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தற்கான செயற்பாடுகளும் முன்னுரிமைப் படுத்தப்பட வேண்டிய அவசர தேவை இங்கு உள்ளது. கடலையும் கடல் வளங்களையும் அடிப்படையாக கொண்ட மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பின்வரும் விடயங்கள் தேர்த்தியாக கையாளப்பட வேண்டும்.
1. கடலும் கடல் சார் வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்
2. நீண்டகால நோக்குடனான கடல் வளங்களின் இனப்பெருக்கத்துக்கான ஏது நிலைகளும் அதற்கான செயற்பாடுகளும் தொடர்ச்சியாகவும் தக்க காலங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்
3. கடலின் ஆழம் மற்றும் தன்மைக்கு பொருத்தமான வகையில் நவீன தொழில் நுட்பங்களும் அதற்கான உபகரணங்களும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்
4. எமது கடல் வளங்கள் பலதேசியக் கம்பெனிகளாலும் பிராந்தியத்திலுள்ள நாடுகளினாலும் சுரண்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும்
5. இவை பற்றி மீனவர்களுக்கு தெளிவூட்டும் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்
இக்கலந்துரையாடலின் முடிவில் இதில் கலந்து கொண்டோர் கோடாலி சின்னத்திற்கும் அச்சின்னத்தில் போட்டியிடும் சம்சோன் ஜெரோமுக்கும் ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர்
No comments
Post a Comment