கம்பஹா தொம்பே கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கராத்தே பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
16 மற்றும் 13 வயதுடைய இரு மாணவிகளே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவிகள் இருவரும் கல்வி கற்கும் அதே பாடசாலையில் கராத்தே பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில்இ சந்தேக நபர் கராத்தே பயிற்றுவிக்கும் போது இந்த இரு மாணவிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment