சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் ( justine boillat) தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(22) மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கான சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் ( justine boillat) தலைமையிலான குழுவினர் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு இன்று (22) காலை விஜயம் செய்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடன் கலந்துரையாடினார்.
இதன் போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் டானில் வசந் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது கட்சியின் செயல்பாடுகள் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,தற்போதைய தேர்தல் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து குறித்த குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும்,தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
No comments
Post a Comment