Latest Articles

Home Design

மன்னார் பொது வைத்தியசாலையில் எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்து வைப்பு

மன்னார் பொது வைத்தியசாலையில் எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்து வைப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய எலும்பியல் துறை சத்திர சிகிச்சை ஆண், பெண் விடுதிகள் நேற்று  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் குறித்த விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது 

மன்னார் மாவட்டத்தின் மிக நீண்ட கால தேவையாகவிருந்த எலும்பு முறிவு மற்றும் சிகிச்சைக்கான விசேட விடுதிகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஸாத் ஹனிபா திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் எலும்பியல் சத்திர சிகிச்சை விசேட நிபுணர்கள் டாக்டர் பி. திலீபன், டாக்டர் ஆர்.எம்.எம். தீபன்,ஏனைய விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia