Latest Articles

Home Design

மக்கள் தமிழரசுகக் கட்சியுடன் இணைந்து பயணிக்கிறார்கள் சட்டத்தரணி எஸ்.டினேசன்.

மக்கள் தமிழரசுகக் கட்சியுடன் இணைந்து பயணிக்கிறார்கள் சட்டத்தரணி எஸ்.டினேசன்.

தமிழரசுக் கட்சியை மக்கள் வெறுக்கவில்லை.கட்சியில் உள்ளவர்கள் சிலரின் தன்னிச்சையான செயல்பாடுகளினால் கட்சி மீது  மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்-

தமிழரசுக் கட்சியை மக்கள் வெறுக்கவில்லை.கட்சியில் உள்ளவர்கள் சிலரின் தன்னிச்சையான செயல்பாடுகளினால் கட்சி மீது  மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என தமிழரசு கட்சி சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்தார்.

தமிழரசு கட்சி சார்பாக மன்னார் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(13) மாலை மன்னாரில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.

-குறித்த கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,,,

-மன்னாரில் இரண்டு வேட்பாளர்கள் தமிழரசு கட்சி சார்பாக போட்டியிடுகின்றனர்.அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது தனது குறிக்கோளாக உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

அவரது கருத்து எமக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது.

எங்களை வெற்றி பெற வைக்க தமது முயற்சிகளையும் மக்கள் மத்தியில் தெழிவூட்டளையும் முன்னெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியை மக்கள் வெறுக்கவில்லை.கட்சியில் உள்ளவர்கள் சிலரின் தன்னிச்சையான செயல்பாடுகளையே மக்கள் வெறுத்து வருகின்றனர் என்பதை நான் வருகை தந்தவர்களிடம் தெரிவித்துள்ளேன்.

பல்வேறு கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்திக்கும் போது குறித்த குற்றச்சாட்டுக்களை மக்கள் என்னிடம் முன்வைத்துள்ளனர்.

எதிர் வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் நாங்கள் செயல்பட வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.


No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia