மன்னார், மடு பிரதேச செயலகத்திற்கு முன்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது மழுவராயன் கட்டையடம்பன் மக்களே இவ்வாறு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மழுவராயன் கட்டையடம்பன் பகுதியில் உள்ள தங்களது பூர்விக காணியினை மடு வன வள திணைக்களத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பூர்விகமாக நாங்கள் அந்த பகுதியில் தோட்டம் செய்து வந்த நிலையில் கடந்த 1997-ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் 2004- ம் ஆண்டு மீள் குடியேறி, 2012 -ம் ஆண்டு முதல் மீண்டும் அங்கே கச்சான், பயறு போன்ற சிறுதானிய பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்தோம்.
இவ்வாறான சூழ்நிலையில் கடந்த 2015- ம் ஆண்டு மடு வன வள திணைக்களத்தினர் தங்களுக்கு சொந்தமான இடம் என கூறி அங்கு சிறுதானிய பயிர்செய்கையையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர், அந்த சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியை வன வள திணைக்களத்தினர் கல் போட்டு தங்களின் பிரதேசமாக மாற்றிகொண்டனர், அந்த சந்தர்ப்பத்தில் மக்கள் எப்படி எங்கள் பூர்விக காணிகளை நீங்கள் கையகப்படுத்துவீர்கள் என கேட்ட போது, நீதிமன்ற தீர்ப்பு வரட்டும் அதற்கு பிறகு குறித்த பகுதியை விடுவிப்பதாக தெரிவித்திருந்தனர்.
அதனடிப்படையில் குறித்த பகுதி மக்களுக்கு உரியது என்றும் குறித்த பகுதியை வன வள திணைக்களத்தினர் விடுவிக்க வேண்டும் என்றும் நீதி மன்றம் தீர்பளித்ததன் பின்னரும் மடு வன வள திணைக்களத்தினர் விடுவிக்கவில்லை எனவும், இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, உடனடியாக எங்களுக்கு சொந்தமான காணியை வன வள திணைக்களத்தினர் விடுவிக்க வேண்டும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியே மடு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றையதினம் காலை மழுவராயன் கட்டையடம்பன் மக்கள் ஆர்ப்பட்டதில் ஈடுபட்டிருந்ததோடு, இவ்வாறு தங்களது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தி இருந்தனர்.
No comments
Post a Comment