Latest Articles

Home Design

மக்கள் மாற்றம் ஒன்றை விரும்புகிறார்கள்-சட்டத்தரணி செல்வராஜ் டினேசன்

மக்கள் மாற்றம் ஒன்றை விரும்புகிறார்கள்-சட்டத்தரணி செல்வராஜ் டினேசன்

வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள அனைத்து மக்களும் என்னை ஆதரிப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை என்னிடம் உள்ளது. மக்கள் மாற்றம் ஒன்றை விரும்புகிறார்கள்-சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் .

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மக்கள் மாற்றம் என்ற ஒன்றை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தின் விளைவாக  இலங்கையினுடைய தென்பகுதியில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அவர்களுடைய ஆட்சி நடைபெற்று வருகின்ற இந்த காலப்பகுதியில் தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றை விரும்பி அரசியலில் இளைஞர்கள், கல்வியாளர்கள் ஈடுபட வேண்டும் என்ற   கோரிக்கைக்கு அமைவாக  நான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன் என நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,

நான் 2018ம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து தற்போது  மன்னார்  நீதிமன்றத்தில் கடந்த ஆறு வருடங்களாக சட்டத்தரணியாக கடமையாற்றி  வருகிறேன்.

இந்த வருடம் 2004 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியில் வன்னி தொகுதியில் இருந்து  மன்னார் மாவட்டம் சார்பாக போட்டியிடுகின்றேன்.

ஏனெனில் மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல இலங்கை முழுவதும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மக்கள் மாற்றம் என்ற ஒன்றை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தின் விளைவாக இலங்கையினுடைய தென்பகுதியில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அவர்களுடைய ஆட்சி நடைபெற்று வருகின்ற இந்த காலப்பகுதியில் தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றை விரும்புகிறார்கள் .

அரசியலில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். இளைஞர்கள் மக்களுடைய பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் கதைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுகின்ற அதே சந்தர்ப்பத்தில் அவர்கள் கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையானது மக்களிடையே காணப்படுகிறது.

அந்த வகையிலே இம்முறை தேர்தலில் நான் தமிழரசு கட்சியின் சார்பில் இளைஞர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக போட்டியிடுகின்றேன்.

அதுமாத்திரமல்ல மக்கள் இன்றும் இலங்கை தமிழரசு கட்சியை நேசிக்கிறார்கள். தமிழரசு கட்சியின் சின்னம் அவர்களுடைய ஒரு அடையாளமாக இன்னும் மக்கள் மனதில் திகழ்ந்து வருகிறது. தமிழரசு கட்சியில் உள்ளவர்கள் சிலர் விடுகின்ற பிழை காரணமாக தமிழரசு கட்சி மீது விமர்சனங்கள் இருந்தாலும் கூட தமிழ் மக்கள் என்றும் எம்முடன்  பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இம்முறை நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியானது மிகப்பெரிய வெற்றியை பெரும் என்ற நம்பிக்கையை நான் உறுதியாக கூறுகிறேன்.

மேலும் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நாம் கொண்டு வருவோம். என்னுடைய அரசியல் பயணத்தில் வருகின்ற நிதி கையாளுகை அல்லது எந்த ஒரு விடயமாக இருந்தாலும் எல்லா  வெளிப்படை தன்மை இருக்கும் என்பதனையும் கூறிக் கொள்கிறேன்.

அதன் அடிப்படையில் என்னிடம் உள்ள சொத்து விவரங்களை கூட நான் சமர்ப்பித்து உள்ளேன்.  நான் இப்பொழுது சமர்ப்பித்த சொத்து விவரங்களையும் பின்பு எனது வெற்றியின்  பின்பு என்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் காலப்பகுதியில் இருக்கும் சொத்து விவரங்களையும்  நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

எனவே வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள அனைத்து மக்களும் என்னை ஆதரிப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை என்னிடம் உள்ளது ஏனெனில்  என்னுடைய கரங்கள் கரை படியாத கரங்களாக இருக்கிறது  அந்த வகையில்  ஊழலற்ற அரசாங்கத்தோடு இணைந்து பயணிக்க கூடிய தகுதியும் தகைமையும் தமிழரசு கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் இருக்கிறது.

எனவே தமிழரசு கட்சியில் முதல் தடவையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற   ஊழல் அற்ற எந்த ஒரு கரையும் படியாத இளைஞனாகிய என்னை  இந்த வன்னி  தேர்தல் தொகுதியில் உள்ள மக்கள் நிச்சயமாக தேர்ந்தெடுப்பார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு நிறையவே  உள்ளது.

தற்போது இந்த அரசியல்  களமானது மிகவும் வேறுபட்ட களமாக காணப்படுகிறது. இந்த தேர்தலில் இருந்து பல நபர்கள் விலகி இருக்கிறார்கள். வன்னி தேர்தல் தொகுதியில் பல வெற்றிடங்களை உருவாக்கியுள்ளது.  அதனால்  மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற வன்னி தேர்தல் தொகுதியில் இருந்து  சிறந்த பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டிய ஒரு தேவை காணப்படுகிறது,

இந்த தேர்தலில் மக்கள்  அனுரகுமார   மேல் உள்ள கவர்ச்சி காரணமாக வன்னி தேர்தல் தொகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

அந்த ஆபத்தை தவிர்த்துக் கொள்வதற்காகவும் மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்தவும் மன்னார் ,வவுனியா, முல்லைத்தீவு  மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதி மக்கள்  என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணிக்கு மாறும்  உங்களுடைய பூரண ஆதரவை எனக்கு வழங்குமாறும் மன்னார் ,முல்லைத்தீவு ,வவுனியா மக்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன்  மேலும் தெரிவித்தார்.  

No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia