இந்தியாவிலிருந்து ஒரு தொகை கேரள கஞ்சா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக மன்னார் தள்ளாடி இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளுடன் இணைந்து 30.09.2024 அன்று. யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஒரு தொகை கேரள கஞ்சா பொதிகள் மீட்பக்கட்டது
சம்பவ இடத்தில் இராணுவம் மற்றம் பொலிநாரை பார்த்த சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
இதன்போது 104 கிலோ. 217 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகளின் மதிப்பு சுமார் 36 மில்லியன் ரூபா பெறுமதி என்று தெரிய வருகிறது
மேலதிக விசாரணைகளுக்காக கஞ்சா போதைப்பொருள் பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது
No comments
Post a Comment