மன்னார் மாவட்டத்தில் மேலோங்கி நிற்கு போதை வஸ்து கலாச்சாரத்தை அடியோடு இல்லாது ஒழிப்பதற்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் கோடாலி சின்னத்துக்கும் இலக்கம் 9 ல் போடடியிடு தனக்கும் வாக்களிக்க வேண்டும் என்று வேட்பாளர் சம்சோன் ஜெரோம் அவர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
மன்னார் பனங்கட்டி கொட்டு கிராமத்தில் இன்று(28-10-2024)காலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்
மேலும் மன்னார் மாவட்டத்தை பொருத்தமட்டில் 15தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் இந்த போதை வஸ்துக்கு அடிமையாக இருக்கின்றார்கள் இந்த ஆபத்துகளிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க வேண்டும் இதற்கு பின்னால் யார் நிற்கின்றார்கள் என்று பார்த்தால் அனேகமான மக்கள் ஊகித்துக் கொள்கின்றார்கள் இவ்வாறான நிலையில் வெள்ளாடுகளையும் கறுப்பாடுகளையும் இனம் கண்டு நீதியான சமூக அக்கறை கொண்டவர்களை மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்
அத்துடன் இந்த போதை வஸ்து பாவனைகளால் பிரதானமாக மன்னார் தீவினில் இருக்கக்கூடிய பல கிராமங்கள் பாதிக்கப்படுகிறது இவ்வாறான பிரச்சனைகளை தடுக்க கூடியவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும். அப்படி பாராளுமன்றம் செல்பவர்கள் காசு உழைக்கும் நோக்கில் சென்றால் அவர்கள் எந்த வழியிலும் பணம் உழைப்பதில் குறியாக இருப்பார்கள் ஆகவே இதய சுத்தியுடன் இந்த பிரச்சனைகளை கையாள கூடியவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்
மேலும் மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலில் உள்ள பிரச்சனைகள் ஏராளம் கடல் வளங்களை பாதுகாத்தல் கடல் வளங்களை பெருக்குவதிலும் நிறைய சவால்கள் இருக்கிறது முக்கியமாக இந்த காற்றாலை மின் திட்டம் வந்த பிறகு மீன்பிடிகள் குறைவு என்ற பிரச்சினைகள் இருக்கிறது இதற்குரிய மாற்றுத் திட்டங்கள் தீர்வுகள் கண்டுபிடிக்க வேண்டும் இந்த மாதிரியான திட்டங்கள் கொண்டு வருவது பாராளுமன்றத்தின் ஊடாக அங்கு தான் நிதி ஒதுக்கப்படுகிறது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் திட்டங்களை தடுப்பதற்கு சரியான நபர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக போனால்தான் இவ்வாறான திட்டங்களை பாராளுமன்றத்தில் தடுக்கலாம் திட்டங்கள் தீர்மானித்ததன் பிறகு இங்கு அமுல்படுத்தப்படும் போது மக்கள்தான் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது
அதனால் சரியான நபர்களை பாராளுமன்றம் உறுப்பினர்களாக தேர்வு செய்வது மக்களின் வரலாற்றுக் கடை என்று வேட்பாளர் சம்சோன் ஜெரோம் அவர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
No comments
Post a Comment