நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
இன்று (19)காலை 9.30. மணியளவிலி வவுனியாவில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி-யின் மாவட்டக் காரியாலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்வில் வவுனியா செட்டிகுளம் மக்களால் பெரிதும் நேசிக்கும் இளம் சமூக சேவையாளரும் வன்னி தேர்தல் தொகுதியில் வேட்பாளருமான தேவசகாயம் சிவானந்தராசா உட்பட வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தேவசகாயம் சிவானந்தராசா அவர்கள் நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் தமிழ் தேசியத்துடன் கூடிய அபிவிருத்தியில் பயணிப்பேன் அத்துடன் எனது மாத வருமானத்தை கல்விக்காக கஷ்டப்படும் குழந்தைகளுக்கு பாகிர்ந்தளிப்பேன் என்றார்
No comments
Post a Comment