மக்கள் தமிழர் அரசியலில் மாற்றத்தை விரும்புகிறார்கள் அந்த மாற்றம் என்பது அரசியலில் செயற்திறன் மிக்கவர்களை பாராளுமன்றம் அனுப்புவதுதான் என்று வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழு வேட்பாளர் சம்சோன் ஜெரோம் அவர்கள் தெரிவித்துள்ளார்
இன்றைய தினம் (25) மன்னார் அடம்பன் பகுதியில் நiடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்
தமிழ் மக்கள் இன்று வலுவாக நம்பிக்கை கொண்டுள்ள சுயேட்சைக் குழுவின் கோடாலி சின்னம் வெற்றி பெற்றால் நேர்மையான நல்ல வரப்பிரசாதங்களை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் அதில் மன்னார் மாவட்ட மக்களின் ஜீவனோபாயமான இருக்கும் கட்டுக்கரை குளத்திiனை தரமுயர்த்துதல் தந்திரிமலையிலிருந்து கோடைகாலத்திலும் கட்டுக்கரைக்கு தடையில்லாத நீர் வரத்தினை உறுதிப் படுத்துதல் போன்றவை பிரதானமாகும்
அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள் அதே அரசியல் தான் எமது பிள்ளைகளின் கல்வியையும் தலைவிதியையும் தீர்மானிக்கிறது அதற்காகவே தூய்மையான அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறோம்
அரசியலில் ஒரு மாற்றம் உண்டு ஏற்பட வேண்டும் என்று எமது இக்கட்சி பலராலும் வரவேற்கப்படுகின்றது அதிலும் ஊழலற்ற நேர்மையான ஆட்சி நடைபெறும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் நம்புகிறார்கள் தெற்கில் ஜனாதிபதியாக அனுரகுமாரா திசநாயக்க தெரிவு செய்யப்பட்டவுடன் பாராளுமன்றத்திற்கு யார் தமிழர் தரப்பிலிருந்து செல்ல வேண்டும் என்ற சிந்தனை மக்கள் மனதில் வலுவாக எழுந்துள்ளது
அதில் நேர்மையானவர்கள் உண்மையானவர்கள் மக்கள் பணிகளில் சிறப்பாக செயல்பட்டவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகள் வேண்டும் என்பதை மக்களின் எதிர்பார்ப்பு
இந்த சூழ்நிலையில் மறுபக்கம் பார்த்தால் பழையவர்கள் வேண்டாம் என்பது சுமூக ஆர்வலர்களிடையே பெரிய பேசு பொருளாக இருக்கின்றது பழைய பாராளுமன்ற முகங்களுக்கு பாரிய எதிர்ப்பும் இருக்கின்றது இந்தச் சூழ்நிலையில்தான் எங்களைப் போன்றவர்கள் அரசியலுக்குள் வரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது
எனவே எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் எம்மைப் போன்ற செயற்திறன் மிக்க புதியவர்களுக்கு மக்கள் பாராளுமன்றம் வெல்ல ஆணையும் சந்தர்ப்பமும் தர வேண்டும் என்று சுயேற்சைக் குழு கோடாலி சின்னம் இல-9 ல் போட்டியிடும் சம்சோன் ஜெரோம் அவர்கள் கேட்டுக் கெபாண்டார்
No comments
Post a Comment