நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் செல்வராஜ் டினேசனின் தேர்தல் அலுவலகமானது தலைமன்னார் பியர் மற்றும் பேசாலையில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது
இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்
இதன் போது கருத்து தெரிவித்த வேட்பாளர் செல்வராஜ் டினேசன் அவர்கள்
இந்த தேர்தலில் பல கட்சிகள் பிரிந்து போட்டியிடுவதால் இம்முறை தமிழரசுக் கட்சியின் ஆசனம் குறைவடையும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது ஆகவே மக்கள் ஒன்று திரண்டு தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தமது பிரதிநிதித்துவத்தை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதொடு மக்கள் பொறுப்புணர்வோடு செயற்பட்டு தகுதியானவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் செல்வராஜ் டினேசன் கேட்டுக் கொண்டார்
No comments
Post a Comment