நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பில் வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்திலுந்து போட்டியிடும் இளம் வேட்பாளர் சேமநாதன் பிரசாத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பளித்துள்ளனர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் சேமநாதன் பிரசாத் தலைமையில் நேற்று இரவு மன்னார் ஓலைத் தொடுவாய் வளநகர் உட்பட பல கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்தனர் இதன் போது கடந்த காலங்களில் பதவி வகித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்வு ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் மக்களுக்கு எதுவும் செய்யாது தங்களுக்கான வரப்பிரசாதங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டனர் இதனால் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் இளம் வேட்பாளருக்கு எமது ஆதரவை வழங்க உள்ளதாக தெரிவித்தனர்
இது தொடர்பாக வேட்பாளர் சோமநாதன் பிரசாத் கருத்து தெரிவிக்கும் போது
கடந்த காலங்களில் இதர கட்சிகளில் வாக்கு கேட்டு பதவிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு சேவை செய்யாமல் தங்களது பொக்கற்றுகளை நிரப்பி ஊழலில் மாட்டிக் கொண்டார்கள் இது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் தெரியும் இதன் காரணமாக நாங்கள் போகும் இடமெல்லாம் மக்கள் நல்ல வர7வேற்பினை தருகிறார்கள் நிச்சயமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்னியில் ஒரு ஆசனத்திற்ம் மேல் கைப்பற்றும் என்றார்
No comments
Post a Comment