மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தள்ளாடி சந்தி அருகில் மன்னார் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு (DCDB)பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் (DCDB)பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களால் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
இதன் போது சந்தேக நபரிடம் இருந்து 04 கிலோ 315 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
இந்த நடவடிக்கையானது மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் L.Y.A.S.சந்திரபால வின் பணிப்பில்,பொலிஸ் அத்தியட்சகர் (1)H.M.C.P.கேரத் இன் வழிகாட்டலில் மன்னார் மாவட்ட குற்றதடுப்பு தற்காலிக பொறுப்பதிகாரி உ.பொ.ப .பத்மகுமார,பொ.சா.36501 ரத்னமணல தலைமையிலான அணியினரால் மேற் கொள்ளப்பட்டது
இதில் சந்தேகநபர் கள்ளியகட்டைகாடு பகுதியை சேர்ந்த37வயதுடையவர் என்று தெரிய வருகிறது
மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் வழக்கு பொருட்கள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment