தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
அதன்பின்அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இந்த அமைப்பு மேலும் தீவிரமடைந்து இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரலாம். இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மிமீ க்கு மேல் ஓரளவு கனமழை பெய்யக்கூடும்
மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்
தற்போது நிலவும் வானிலை காரணமாக கடும் மழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், வங்காள விரிகுடாவில் உருவாகும் குறைந்த அழுத்தம் சுழற்காற்றாக மாறும் வாய்ப்பும் உள்ளது. இதனால் வெப்பநிலை குறைவாகும் சூழல் உருவாகலாம்.
2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட மொண்டோ சுழற்காற்றின் போது, கடும் குளிர்காலம் காரணமாக பல கால்நடைகள் உயிரிழந்தது நினைவிருக்கலாம். இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்க, தயவுசெய்து கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளவும்:
1. கால்நடைகளை பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு மாற்றுங்கள், வெள்ளத்திலிருந்து பாதுகாக்க.
2. குளிர்ந்த வானிலையிலிருந்து தப்பிக்க போதிய தங்குமிடங்களை ஏற்பாடு செய்யுங்கள்.
3. தொடர்ந்து வானிலை தகவல்களை கவனித்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்.
தகவல்:
மாகாண பிரதிப் பணிப்பாளர்
கால்நடை அபிவிருத்தி மற்றும் சுகாதார திணைக்களம்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவு
No comments
Post a Comment