Latest Articles

Home Design

சிறப்பாக இடம் பெற்ற "பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம்" வீதி நாடகம்

சிறப்பாக இடம் பெற்ற "பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம்" வீதி நாடகம்

நாடளாவிய ரீதியில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பணிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் தேர்தலில் பெண்களின் பங்குபற்றுதலை அதிகரிக்கும் முகமாகவும் அரசியலில் பெண்களின் அங்கத்துவத்தினை ஸ்திரப்படுத்துவதை நோக்காக கொண்டு தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு வீதி நாடகம் நேற்றைய தினம் மன்னார் பேரூந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டது

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மகாலட்சி குருசாந்தனின் ஒழுங்கமைப்பில் மன்னார் பிரதான பேரூந்து நிலையத்தில் குறித்த வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது குறித்த நாடக காட்சிப்படுத்தலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கனகேஸ்வரன்,மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் அரச உத்தியோகஸ்தர்கள்,மாதர் அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகள் பொது மக்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டு நாடகத்தை முழுமையாக பார்வையிட்டனர்

அதனை தொடர்ந்து குறித்த வீதி நாடகமானது நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் காட்சிப்படுத்தப்பட்டதுடன் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண் அரசியல் பிரவேசம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது



No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia