மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் இரவு பெய்த தொடர் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள குடும்பங்கள் அனைவரின் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளதால் இரவிரவாக பரிய துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்
முறையற்ற கழிவு நீர் முகாமைத்துவத்தால் மழை நீர் வழிந்தோட முடியாமல் பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச மக்களும் இந்த வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
குறிப்பாக வழமையான வெள்ளப்பாதிப்புகளை அதிகமாக அனுபவித்து வரும் மன்னார் நகர கிரதேச செயலாளர் பிரில் சாந்திபுரம் ஜிம்ரோன் நகர் எமிலநகர் மக்கள் இம்முறையும் பாரிய பாதிப்புகளுக்கு முகங் கொடுத்துள்ளார்கள்
குறித்த பகுதி மக்களின் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியுள்ளதால் எழுத்தூர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்
இதுவரை தமக்கான எந்த ஒரு ஆரம்ப கட்ட உதவிகளும் கிடைக்கவில்லை என்று அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்
இந்த மழை அனர்த்தத்தால் முதியவர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள் பச்சிளம் குழந்தைதகள் எனப் பலரும் ஒழுங்கான உறக்கம் உணவும் இன்றி பாதிக்கப்பட்டுள்ளார்கள்
தேர்தல் காலங்களில் தேவைக்கு அதிகமாக உணவுப் பொதிகள் தந்த அரசியல்வாதிகளையம் நலம் விசாரித்த அரசியல் வாதிகளையும் தற்போது காணவில்லை வாக்குகளுக்காக காலைப் பிடித்தவர்கள் இன்று அவர்கள் சொகுசாக வாழ்வதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்
இதே வேளை இந்த வெள்ள அனர்த்தத்தால் 1502 குடும்பங்களை சேர்ந்த 5843 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதுடன் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது 70 குடும்பங்களை சேர்ந்த 307 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளார்கள் 27 குடும்பங்களை சேர்ந்த 94 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது
No comments
Post a Comment