Latest Articles

Home Design

தேர்தல் பிரச்சாரங்கள் நிறுத்தப்படுவது தொடர்பான முக்கிய அறிவித்தல்

தேர்தல் பிரச்சாரங்கள் நிறுத்தப்படுவது தொடர்பான முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் பிரச்சாரக் காலம் நிறைவடைகிறது.


இந்நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பொதுத்தேர்தல் தேர்தல் முடிவடையும் நேரம் வரை மௌன காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த காலப்பகுதியில் அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை தேர்தல் சட்டத்தை மீறும் எந்தவொரு நபரையும் கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை  குறித்த நாட்களில் தபால்மூலம் வாக்காளிக்க தவறிய  வாக்காளர்கள் இன்றும் (07) நாளையும் (08) தமது பணியிடத்திற்கு அமைய மாவட்ட செயலகத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுத் தேர்தல் தொடர்பில் முறைப்பாடுகள்

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை) 1938 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு  455 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1429 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 19 முறைப்பாடுகளும்  ஏனைய விடயங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது 

No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia