யாழ் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து இன்று திங்கட்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெறமாட்டாதென நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையே இதற்கு காரணமாகும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக யாழ் வைத்தியசாலை செல்லவேண்டியவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
பொது மக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியான அறிவித்தலை விடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment