Latest Articles

Home Design

உழவு இயந்திரம் கவிழ்ந்து காணாமல் போன மாணவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு

உழவு இயந்திரம் கவிழ்ந்து காணாமல் போன மாணவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டுச் சென்ற சம்பவத்தில் காணாமல்போனவர்களில் ஒரு மாணவன் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

நேற்று 11 மத்ரஸா மாணவர்கள் பயணித்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டுச் சென்றதில் 5 மாணவர்கள் நேற்றை தினம் மீட்கப்பட்டனர். 

அதனையடுத்து, காணாமல்போன 6 மத்ரஸா மாணவர்கள், உழவு இயந்திர சாரதி, உடன் பயணித்த மற்றுமொருவர் என 8 பேரை தேடும் பணிகள் இன்றும் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் காணாமல்போன 6 மாணவர்களில் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, காணாமல்போன ஏனையவர்களையும் தேடும் நடவடிக்கை தொடர்கிறது. 


No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia