பத்தாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு வியாழக்கிழமை (21) நடைபெற்றிருந்த நிலையில் இதன்போது முதலில் சபாநாயகர் பிரதி சபாநாயகர் குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன.
இதனையடுத்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் அஷோக்க ரன்வெலவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அவரைத்தொடர்ந்து மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்துக்களைத் தெரிவு செய்திருந்தார்.
இதனையடுத்து நடைபெற்ற முதலாவது கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் டிசம்பர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள முதலாவது பாரளுமன்ற அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்கான பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தினை நடத்துவதற்கான திகதி தீர்மானிப்பதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது ஆளும் தரப்பினால் 26 27 திகதிகள் முன்மொழியப்பட்டபோது சிறிதரன் குறித்த இரண்டு திகதிகளில் மாவீரர்கள் வாரத்தின் இறுதிநாளாக இருப்பதால் பங்கெடுப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து 28ஆம் திகதி மாலை பாராளுமன்ற அலுவல்கள் பற்றி குழுவைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் மாவீரர் வாரத்தினால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்ற சிறிதரன் கூறியபோதும் எவ்விதமான பிரதிபலிப்புக்களையும் கட்சித்தலைவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment