இலங்கையின் 17 வது பாராளுமன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (14) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.
வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.
காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும் பின்னர் மக்கள் வருகை தந்து வாக்களிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலை பார்கிலும் காலை நிலவரபடி அதிகமான மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இதே நேரம் மன்னாரில் இன்று 6 தேர்தல் முறைப்பாட்டு சம்பவங்கள் பதிவு
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தேர்தல் வாக்கு பதிவுகளின் போது 6 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கொண்டவாரு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
மன்னார் மாவட்ட தேர்தல் நிலவரத்தை பொறுத்த வரையில் காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரையான நிலவர படி 98 வாக்களிப்பு நிலையங்களில் 21இ784 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது மொத்த வாக்களிப்பில் 24 வீதமாகும்.
அதே நேரம் இது வரை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை மன்னார் மாவட்டத்தில் 26 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அதில் இன்றைய தினம் 6 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.
No comments
Post a Comment