Latest Articles

Home Design

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் நபரொருவருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 


இந்த உத்தரவை இன்று திங்கட்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமிக்கு 02 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாது

வெசாக் பண்டிகை அன்று 11 வயது சிறுமி ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் இணைந்து வெசாக் கூடுகளைப் பார்வையிடச் சென்றுள்ளார்.

இதன்போது  சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் வெசாக் கூடுகளை காண்பித்து சிறுமியை ஏமாற்றி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia