காலி அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
41 வயதுடைய ரஷ்ய பெண்ணொருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இந்த ரஷ்ய பெண் கடந்த 8 ஆம் திகதி அன்று இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் இந்த ரஷ்ய பெண் கடந்த 12 ஆம் திகதி அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அதிகளவில் மது அருந்திவிட்டு தனது ஹோட்டல் அறைக்குச் சென்றுள்ளார்.
இதன்போது ரஷ்ய பெண்ணின் ஹோட்டல் அறைக்குள் அத்துமீறி நுழைந்த இனங்காணாத நபரொருவர் இந்த ரஷ்ய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனையடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான ரஷ்ய பெண் இது தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவன் உயிரிழந்த சம்பவம்
அத்துடன் கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நேற்று (16) காலை கள்ளிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுவன் கள்ளிக்குளம் மாமடு பிரதேசத்தைச் சேர்ந்தவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவன் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு சென்றுள்ளான். அவ்வேளைஇ கிணற்றுக்குள் தண்ணீர் வாளி விழுந்துள்ளது. அதை எடுக்க முயன்றபோதே கிணற்றில் விழுந்துள்ளதாக மாமடு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments
Post a Comment