Latest Articles

Home Design

வவுனியா செட்டிகுளம் தமிழரசுக் கட்சி தேர்தல் அலுவலகத்திற்கு தீ வைப்பு

செட்டிகுளத்தில் உள்ள தமிழரசுக் கட்சி தேர்தல் அலுவலகத்திற்கு தீ வைப்பு

நடைபற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் தேவசகாயம் சிவானந்தராசா அவர்களின் தேர்தல் பிரச்சார அலுவலகம் இனந் தெரியாத நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது 

வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள அலுவலகமே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டது 

இந்த சம்பவமானது நேற்று (9) நல்லிரவு வேiயில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது


தீப் பரவலை அவதானித்த பக்கத்தில் உள்ளவர்களால் விரைவாக தீ அணைக்கப்பட்டது 

சம்பவம் தொடர்பாக வேட்பாளர் தேவசகாயம் சிவானந்தராசா மற்றும் ஆதரவாளர்களால்  செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்ட்டது 


தனது  வெற்றி பயணத்தை ஐீரணிக்க முடியாதவர்களின் கையாலாகாத வேலையாக  இந்த செயல் இருப்பதாக தேவசகாயம் சிவானந்தராசா தெரிவித்தார் 

No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia