கணவனால் தீ வைக்கப்பட்டு காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் தில்லையடி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய மனைவியே உயிரிழந்துள்ளார்.
குடும்ப தகராறு
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதால் கோபமடைந்து கணவன் தனது மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
பின்னர்இ கோபம் தணிந்த கணவன் தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற போது தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
மற்றும் மாத்தறை ஊருபொக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டிகல பிரதேசத்தில் நபரொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு இடம்பெற்றுள்ளது.
மாத்தறை பட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது
கொலை செய்யப்பட்டவர் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற போது இனந்தெரியாத நபரொருவர் இவரை அடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து காயமடைந்தவர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊருபொக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து காயமடைந்த கணவரும் மனைவியும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மனைவி மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த மனைவி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment