Latest Articles

Home Design

நீண்டநாள் கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார் - ஒருவர் கைது!

நீண்டநாள் கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார் - ஒருவர் கைது!

 யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் சுற்றிவளைப்பு செய்யப்பட்டது.

இதன்போது, 166 லீட்டர்கள் கோடா, 10.5 லீட்டர் கசிப்பு என்பவற்றுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய இரண்டு பெரிய கொள்கலன்கள், இரண்டு சிறிய கொள்கலன்கள், இரண்டு செப்பு சுருள் என்பவற்றுடன் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் 

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சி.ஐ.கொஸ்தா அவர்களது தலைமையின் கீழ் இயங்கும் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, கெட்டியாராய்ச்சி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ரத்நாயக்க, பி.எஸ். ரத்நாயக்க (இலக்கம் - 45714) பி.சி விஜேரத்ன (இலக்கம் 83244) பி.எஸ் ரத்நாயக்க (இலக்கம் 75227) பி.சி பத்திராஜ (இலக்கம் 22872) பி.சி மிகிர்சன் (இலக்கம் 91737) பி.சி. பெரேரா ( இலக்கம் 102046) ஆகியோரை உள்ளடக்கிய பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா அபின் போன்ற பல்வேறு போதை வஸ்து  பிரச்சனைகளால் சிறுவர்களும் மாணவர்களும் பாதிப்படைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக குற்றஞ் சாட்டி வருவது குறிப்பிடத் தக்கது 

No comments

Post a Comment

© all rights reserved
made with by winjmedia