நடைபெற்று முடிந்த இலங்கையின் 10 வது பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி 7 ஆசனங்களைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்த நிலையில் அந்த கட்சிக்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்று பாரிய குழப்ப நிலை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது
இதனை தீர்த்து முடிவெடுப்பதற்காக இன்று (17) தமிழரசுக் கட்சியின் கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது
இந்த அரசியல் குழுக் கூட்டம் காலை பத்து மணிக்கு வவுனியாவில் உள்ள அக்கட்சியின் மாவட்டக்கிளை காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.
நடைபெற்று நிறைவடைந்த பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு வடக்கு கிழக்கில் ஏழு ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில் தேசியப் பட்டியலில் ஆசனமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசனத்தினை இம்முறை யாழ்.தேர்தல் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யுமாறு கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஆசமொன்றையே தமிழரசுக்கட்சியால் பெற்றுக்கொள்ள முடிந்தமையாலும் தேசிய மக்கள் சக்தி அங்கு மூன்று ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளமையாலும் தேசியப் பட்டியல் ஆசனம் யாழ்ப்பாணத்துக்கே வழங்கப்பட வேண்டும் என்பது அந்த உறுப்பிர்களின் கருத்தாகவுள்ளது.
இதேவேளை, தேசியப் பட்டியல் ஆசனத்தினை சுமந்திரனுக்கு வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ள போதும் சுமந்திரன் தேசியப் பட்டியல் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருவதோடு பெண் ஒருவருக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தினை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தினை அக்கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால், தேசிய மக்கள் சக்தி புதிய அரசியலமைப்பினை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 2015ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாட்டில் அவர் ஈடுபட்டவராக உள்ளார். என்று தனது கருத்தை தெரிவித்தார்
No comments
Post a Comment