தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடக்கு திசையில் வட இலங்கை அருகில் தமிழக கரையை நோக்கி நகர்ந்து செல்லும் இன்று (டிசம்பர் 11) புத்தளத்திலிருந்து காங்கேஷன் துறை மற்றும் மன்னார் ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற் பகுதிகளுக்கு கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடன் பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படுவதுடன் காற்றின் வேகம் (50-60) கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.
இதன்போது நீங்கள் செய்ய வேண்டியது.
1.மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோரம் வசிப்பவர்கள் கூடிய அவதானத்துடன் இருத்தல் காற்றின் வேகம் அதிகரிப்பதனால் கடல் வெள்ளம் ஏற்படலாம்.
மேலும் 100 மில்லி மீற்றர் வரை மழை எதிர்வு கூறப்பட்டுள்ளதனால் கடற்கரையோரம், தாழ்நிலைப்பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் வெள்ள அபாயம் குறித்து கூடிய அவதானத்துடன் இருத்தல்.
2.மழையின் போது காற்றின் வேகம் உயர்வாக இருப்பதனால் அதிக அவதானத்துடன் இருத்தல் மற்றும் சிறு பிள்ளைகள் தொடர்பாக கூடிய கவனம் எடுத்தல்.
3.மேலும் மழையின் போது மரங்கள் முறிந்து விழும் சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் அது தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படல்.
4.மின்சாரக் கம்பங்கள் கம்பிகள் தொடர்பாக அவதானத்துடன் செயற்படல்
5.மேலதிக உதவிக்கு 117 ஐ அழைக்கவும்
தகவல்
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு,
மன்னார்.
No comments
Post a Comment