வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இளம் குடும்பப் பெண் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்ட்டது
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.
வவுனியா செட்டிக்குளம் பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த இந்தப் பெண் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர்இ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment